EN
Local

பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் பணி இடைநீக்கம்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் ஹெரோயின் போதைப்பொருள், சிகரெட், லைட்டர்கள் மற்றும் புகையிலை துண்டுகளை வைத்திருப்பதற்கு இவர்கள் இடமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தாள்கள் மற்றும் குழாய் வடிவில் சுருட்டப்பட்ட பணத்தாள்கள் ஆகியவற்றைச் சிறைக்கூண்டிற்குள் வைத்திருக்கவும் இவர்கள் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் குறித்த சிறைக்கூண்டுகளைச் சோதனையிட்டபோது, இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button