EN
Local

வாகனக் கடன் எல்லைகளை மேலும் குறைத்த மத்திய வங்கி – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுல்

மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் எல்லைகளை மேலும் கட்டுப்படுத்தும் தீர்மானம் இன்று திங்கட்கிழமை (25) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, வர்த்தக வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் எல்லை 70 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, வாகனத்தின் மொத்த பெறுமதியின் 70 சதவீதம் வரை வழங்கப்பட்ட கடன் வசதி, இனிமேல் 60 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

அதேவேளை, மோட்டார் கார்கள், எஸ்.யு.வி ரக வாகனங்கள், வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கான கடன் எல்லையும் 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டிலும் மத்திய வங்கி வாகனக் கடன் எல்லைகளில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதி வரை வர்த்தக வாகனங்களுக்கான கடன் எல்லை 80 சதவீதமாகவும், மோட்டார் கார்கள் மற்றும் வேன்களுக்கான கடன் எல்லை 60 சதவீதமாகவும் காணப்பட்டது.

பின்னர், 2025 நவம்பர் 7ஆம் திகதி அவை மேலும் குறைக்கப்பட்டு, வர்த்தக வாகனங்களுக்கு 70 சதவீதமாகவும், கார்கள், வேன்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு 50 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய வங்கி மீண்டும் இந்தக் கடன் எல்லைகளைத் திருத்தி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button