EN
Local

குருநாகல் – புத்தளம் வீதியில் விபத்து

குருநாகல் – புத்தளம் வீதியில், குருநாகல் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்சாரத் தூண் மற்றும் தொலைபேசித் தூண் என்பவற்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button