Local
குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17ஆம் திகதி விசாரணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதி தரப்பிற்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட வழக்கு விசாரணையை நிறைவு செய்த நீதவான், ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதாக உத்தரவிட்டார்.




