Local
பரீட்சை விண்ணப்பங்களுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 2026 டிசம்பரில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதை உறுதி செய்யுமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்பாகவே பாடசாலை மாணவர்களும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.




