EN
International

மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் விருப்பம் – டிரம்ப்

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உயர்மட்ட தலைமையினர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யூடியூபில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் உச்சத் தலைவர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ அல்லது புதிய அணு ஆயுதங்களை உருவாக்கவோ மாட்டோம் என ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

எனினும், இந்த விடயம் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலைக்கு மத்தியில், இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Back to top button