எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று (26) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, உலக நாடுகளால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 105.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 94.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரே நாளில் இரு வேறு ரக மசகு எண்ணெய்களின் விலையில் இவ்வாறான முரண்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது




