EN
International

தாய்வானுக்கு ஆயுத விற்பனை குறித்து இறுதி முடிவு இல்லை

தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவை எடுக்கவில்லை’ என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், ஏா் ஃபோர்ஸ்-1 விமானத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது தாய்வான் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. தாய்வான் விவகாரத்தை அமெரிக்கா தவறாகக் கையாண்டால், அது இருதரப்புக்கும் மோதலைத் தூண்டும் என ட்ரம்ப்பிடம் ஷி ஜின்பிங் நேரடியாக எச்சரித்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் இது தொடா்பாக மேலும் தெரிவிக்கையில்,

‘தாய்வான் தனி நாடாகச் சுதந்திரம் பெறுவதை சீனா கடுமையாக எதிர்ப்பதாக ஷி ஜின்பிங் என்னிடம் கூறினார். அவரின் கருத்துகளை நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தாய்வானைச் சீனா தாக்கினால், அமெரிக்கா அந்நாட்டைப் பாதுகாக்குமா என்றும் ஷி ஜின்பிங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளிக்கவும் நான் மறுத்துவிட்டேன். அக்கேள்விக்கான பதில் எனக்கு மட்டுமே தெரியும். நான் அதை வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button