EN
Local

செம்மணி மனிதப் புதைகுழியில் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு – சிறுவர் மற்றும் சிசு என்புகள் அடங்கும்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்று சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்றும் இந்த அகழ்வுப் பணியில் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 20ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இதன்போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இதற்கு மேலாக, மேலும் ஒரு சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை செம்மணி பகுதியில் மொத்தம் 327 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 311 என்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button