Local
பிரேத பரிசோதனைக்கு விசேட மருத்துவ குழு நியமனம்

திறைசேரி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக, நான்கு நீதித்துறை மருத்துவ ஆலோசகர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.




