EN
Sports

கடற்கரை மல்யுத்தப் போட்டி – நிபுனி வாசனாவுக்கு தங்கப் பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2026இல் நடைபெற்ற கடற்கரை மல்யுத்தம் – மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் நிபுனி வாசனா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதல் தங்கப் பதக்கம் வென்ற விமானப்படையின் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில்,மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை விமானப்படை வீராங்கனையான நிபுனி வசன தர்மதாச, இறுதிப் போட்டியில் வியட்நாமிய வீராங்கனையைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

2026இல் நடைபெறும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

Related Articles

Back to top button