550 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனியால் நீர்கொழும்பு களப்புப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, களப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, 15 பைகளில் கட்டப்பட்டிருந்த 553 கிலோகிராம் பீடி இலைகள், சந்தேக நபர்கள் இருவர் மற்றும் குறித்த படகு ஆகியன கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.




