Local
சீரற்ற காலநிலை காரணமாக 88 வீடுகள் சேதம்

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் ஏழு மாவட்டங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவிலான பாதிப்புகள் களுத்துறை மாவட்டம் பகுதியில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்புகள்
- களுத்துறை மாவட்டம் – 40 வீடுகள்
- மட்டக்களப்பு மாவட்டம் – 25 வீடுகள்
- இரத்தினபுரி மாவட்டம் – 9 வீடுகள்
- காலி மாவட்டம் – 5 வீடுகள்
- கொழும்பு மாவட்டம் – 5 வீடுகள்
- மொனராகலை மாவட்டம் – 4 வீடுகள்
மேலும், மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




