EN
Local

மாத்தளையில் துயர விபத்து: வயோதிபர் உயிரிழப்பு, பேத்தி காயம்

மாத்தளை இராஜவீதிப் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (13) காலை சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தெரிவித்ததன்படி, மாத்தளை கிளையிலிருந்து கொழும்பு நோக்கி லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் சக்கரத்தில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல்களின்படி, அவர் தனது பேத்தியை உக்குவளையிலிருந்து மாத்தளையில் உள்ள பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், தூக்கி எறியப்பட்ட அவரது பேத்தி பலத்த காயமடைந்து மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் சாரதி மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button