குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஜனாதிபதி நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மாதாந்த கல்வி நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம், 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தற்போது ஜனாதிபதி நிதியம் பல்வேறு துறைகளில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. அதேபோல், பாடசாலை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி நிதியுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை அனுமதி வழங்கியுள்ளது.




