EN
Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பிள்ளையானைச் சந்தித்ததாக ராஜபக்ஷர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சென்று சந்தித்திருந்ததாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் சிறையில் வைத்து தெரிவித்திருந்ததாகவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button