International
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

சீனாவின் ஹுனான் மாகாணத்திலுள்ள லியுயாங் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று (05) திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 61 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தால் குறித்த கட்டிடம் தரைமட்டமாகிய நிலையில், அதற்குள் சிக்கியே உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் சுற்றளவில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்ததற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.




