Sports
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (879 புள்ளிகள்) மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (838), நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி (836), அவுஸ்திரேலிய அணித்தலைவர் கம்மின்ஸ் (832) தலா ஒரு இடம் முன்னேறி முறையே 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் நமன் அலி (825) 3 இடம் சரிந்து 5ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் முகமது சிராஜ் 12ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 14ஆவது இடத்திலும், குல்தீப் யாதவ் 15ஆவது இடத்திலும் உள்ளனர்.




