Local
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகப அனுமதிக்காக தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில், இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



