EN
Local

மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்

மொழிகளைக் கற்றுக்கொள்ளும் அரச உத்தியோகத்தர்களின் மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொண்ட அரச உத்தியோகத்தர்கள், அந்த மொழிகளை முறையாகப் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

Related Articles

Back to top button