Local
கமல் அமரசிங்க பிணையில் விடுவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க பிலஸ்ஸ நீதவான் டபிள்யூ. எம். எம். ஐ. வாசல உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




