பசறை – நமுனுகுல ஊடாக எல்ல வீதியை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

“திட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின்” கீழ், எல்ல – நமுனுகுல – பசறை வீதியின் (B/113) அபிவிருத்தி மற்றும் காபட் இடும் பணிகள் நேற்று (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) இந்த முழுமையான அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சூறாவளியால் சேதமடைந்த வீதிப் பகுதிகள் புனரமைக்கப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் வீதி நவீனமயப்படுத்தப்படவுள்ளது.
வீதியின் தரத்தை உயர்த்தி, பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், அப்பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.




