EN
Local

BOIயில் நடைபெற்ற 4வது ஜப்பான்–இலங்கை வர்த்தகச் சூழல் குழுக் கூட்டம்

இலங்கையின் முதலீட்டு சபையில் (BOI) ஜப்பான்–இலங்கை வர்த்தகச் சூழல் குழுவின் நான்காவது கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (JCCI), இலங்கையில் செயற்படும் ஜப்பானிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இலங்கையின் கைத்தொழில் சபை மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் ஆரம்ப உரையில், முதலீட்டு சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் தலைவர் டாக்டர் ஜெயவர்தன, இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இரு நாடுகளின் பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அவர், இலங்கையில் உகந்த வணிகச் சூழலை உருவாக்குவதிலும், அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 2 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்குக்கு உயர்த்துவதிலும் இந்தக் குழுவின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினார்.

ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர் கிஷி, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுத் தெரிவித்ததுடன், ஜப்பான்–இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த உரையாடலை தொடர்வது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் இலங்கையில் செயற்படும் ஜப்பானிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வணிக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கும், நாட்டின் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

Related Articles

Back to top button