யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆதரிக்கும் நோக்கில் புலமைப்பரிசில்களை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வின் போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த முதலாம் ஆண்டு 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000 வீதம், அவர்களின் பல்கலைக்கழகக் கல்வி நிறைவடையும் வரை இத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தரும் கலைப்பீட பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.




