Local
அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகளுக்கு அபராதம்

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு எதிராத அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதன் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார்.
இதன்போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீண்டும் பயணிகளுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.




