EN
Local

விசாரணைகள் நிறைவடையும் வரை பல்லேகம ஹேமரத்ன தேரர் பதவியிலிருந்து விலக வேண்டும் – கலகொட அத்தே ஞானசார தேரர்

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் தனது பதவியிலிருந்து விலகி முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு ராஜகிரியவில் வெள்ளிக்கிழமை (29) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தவறு யார் செய்தாலும் அது தவறே. அது சிறியதா அல்லது பெரியதா என்பது முக்கியமல்ல. ஒரு தவறு இடம்பெற்றிருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட வேண்டும்.

எனினும், இந்த விவகாரம் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும், மக்கள் திருப்தியடையும் வகையில் விடயங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது.

தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக, முழு பௌத்த சங்க சமூகமும் மற்றும் பௌத்த நிறுவனங்களும் இலக்காகக் காட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

குறிப்பாக, பௌத்தர்களின் மிகப் புனிதமான வெசாக் பௌர்ணமி காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பரவலாக பேசுபொருளாக மாறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button