EN
Local

மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

மோசமான வானிலை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக Bandaranaike International Airport பயணிகளுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகள் தற்போது வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், விமான நிலையத்திற்குச் செல்லும் பெரும்பாலான சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் தங்களது விமானப் பயண நேரத்திற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து தாமதங்களைத் தவிர்க்க முடிந்தவரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நைகந்த மற்றும் கோவிண்ணா பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button