EN
Local

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி மற்றும் நிவாரண திட்டங்கள் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (22) அம்பாறையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளார்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகம் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button