EN
Local

திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் : இந்திய உயர்ஸ்தானிகருக்கு விரைவில் தமிழரசுக்கட்சி கடிதம் அனுப்ப முடிவு

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பில் யாழில் உள்ள இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஊடாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் யாழப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தும் எமது கரிசனையை வெளிப்படுத்தினோம்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் நேரடியாக யாழ்.மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும். ஆனால் அதன் தளங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பாகவும் எவ்வாறு அதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் குழுவை உள்ளூர் மட்டத்தில் நியமிக்கலாம்.

இக்கட்டிடம் தொடர்பாக கூட்டுமுகாமைத்­துவ முயற்சிகள் தவிர்க்க வேண்டும். அடுத்தவாரம் யாழிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்து இதுதொடர்பில் தெளிவுபடுத்தி கலந்துரையாட இருக்கிறோம் இதன்போது அவர் ஊடாக கடிதமொன்றையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றையும் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்

Related Articles

Back to top button