EN
Local

கடந்தாண்டில் யானைக்கால் நோயினால் 68 பேர் அடையாளம்

கடந்த வருடத்தில் மட்டும் நாட்டில் 68 யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

அவர்களுள் 34 பேர் இந்தியாவில் இருந்து தொழில் நிமித்தம் இலங்கை வந்தார்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய 7 பிரதான மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருந்து யானைக்கால் நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பாக, இலங்கையில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்நோய் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Articles

Back to top button