EN
Local

QR முறைமை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

பெற்றோல் வாகனங்களுக்காக நாளை (18) நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை, இரட்டை இலக்க முறைமை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR முறைமையைச் செயற்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button