கஹவத்த ஸ்ரீ கிருஷ்ணா தமிழர் மகா வித்தியாலயத்திற்கு புதிய இருமாடி கட்டிட தொகுதி

கஹவத்த ஸ்ரீ கிருஷ்ணா தமிழர் மகா வித்தியாலயத்திற்கு புதிய இருமாடி கட்டிட தொகுதி
இலங்கை இரத்தினபுரி, கஹவத்த ஸ்ரீ கிருஷ்ணா தமிழர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடி கட்டிட தொகுதி, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் தோட்ட மற்றும் சமூக அடிப்படை வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (12) மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
ரூபா 345 இலட்சம் செலவில் இந்த புதிய இருமாடி கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் தற்போது 1308 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மேலும் 61 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 1ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




