Local
தன்னார்வ ஓய்வு மின்சார பணியாளர்களுக்கான இழப்பீடு

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நட்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, மொத்த நட்டஈட்டுத் தொகையில் 50 சதவீதத்தை திறைசேரி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.




