பாலியல் குற்றச்சாட்டு நிரூபணம்: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஒஸ்லோ, ஜூன் 2026 – நோர்வே இளவரசி Mette-Marit அவர்களின் மகனான Marius Borg Høiby மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, 29 வயதான மாரியஸ் போர்க் ஹொய்பிக்கு எதிராக பாலியல் வல்லுறவு மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகள் மட்டுமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, Oslo District Court அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அவரது சட்டத்தரணிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டின் அடிப்படையில் மாரியஸ் போர்க் ஹொய்பி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு நோர்வே முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், அந்நாட்டு அரச குடும்பத்தின் பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தீர்ப்பு, அண்மைக்காலங்களில் நோர்வே அரச குடும்பத்துடன் தொடர்புடைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.




