EN
International

“புத்திசாலியான சர்வாதிகாரி” என்று அழைப்பதை தான் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, தன்னை “முட்டாள்” என்று விமர்சிப்பதை விட “புத்திசாலியான சர்வாதிகாரி” என்று அழைப்பதை தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

New York Cityயில் நடைபெற்ற ஆதரவாளர் கூட்டத்தில் பேசிய 79 வயதான ட்ரம்ப், தனது மனநல திறனைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவரிடம் அறிவாற்றல் பரிசோதனை செய்ய கேட்டதாக கூறினார்.

“நான் நீங்கள் சந்திக்கும் மிகவும் புத்திசாலியான மனிதன். அப்படியான ஒருவர் நாட்டை வழிநடத்துவதைக் நீங்கள் விரும்பமாட்டீர்களா?” என்று அவர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும், தன்னை “முட்டாள்” என்று அழைப்பதை ஏற்க முடியாது என்றும், “புத்திசாலியான சர்வாதிகாரி” என்று அழைத்தால் பரவாயில்லை என்றும் ட்ரம்ப் நகைச்சுவை கலந்த வகையில் குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட அறிவாற்றல் பரிசோதனை என்பது பொதுவாக “Montreal Cognitive Assessment (MoCA)” எனப்படும் ஆரம்பகட்ட நினைவாற்றல் மற்றும் மனநல மதிப்பீட்டு சோதனை ஆகும். இது பெரும்பாலும் Dementia போன்ற நினைவழிவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

ட்ரம்ப் தனது ஜனாதிபதி காலத்தில் இந்த பரிசோதனையை மூன்று முறை செய்து, அனைத்திலும் முழு மதிப்பெண் பெற்றதாக தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அனைவரும் இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதற்கு மாறான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். Tufts University School of Medicine-இன் மனநல பேராசிரியர் ஹென்றி டேவிட் ஆபிரகாம், குறுகிய கால இடைவெளியில் மூன்று முறை இத்தகைய சோதனையை செய்வது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.

அதேபோல் Johns Hopkins University-இன் முன்னாள் பேராசிரியர் ஜான் கார்ட்னர், ட்ரம்பின் அறிவாற்றல் திறனில் வீழ்ச்சி அறிகுறிகள் தென்படுகின்றன எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், Pete Hegseth ட்ரம்பின் உடல்நலம் மற்றும் அறிவாற்றலை பாராட்டி, “நீண்ட காலத்திற்கு பிறகு அமெரிக்கா கண்ட மிக கூர்மையான மற்றும் நுண்ணறிவுமிக்க தலைவர்களில் ஒருவர் ட்ரம்ப்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button