தவெகவுடன் கை கோர்த்தது காங்கிரஸ்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்று பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாவது,
“தவெகவுடன் ஆட்சி அமைப்பது குறித்து நேற்றிரவு அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவெடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் நுழைந்துவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. விஜய் மதவாக அரசியலுக்கு எதிராக உள்ளார்.
திமுகவுடனான கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலுக்கானது மட்டுமே. அந்த தேர்தல் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.





