Local
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரி 56 ரக இரண்டு மகசின்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ஆயுதங்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



