Local
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 312.97 ரூபாயிலிருந்து 313.62 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலையும் 320.72 ரூபாயிலிருந்து 321.09 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உட்பட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.





