EN
Local

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான தடுப்புக் காவல் உத்தரவைத் மேலும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கினை எதிர்வரும் மே 20 ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

Related Articles

Back to top button