EN
Local

நவீன டிஜிட்டல் நூலகமாக மாறிய தேசிய சுற்றாடல் தகவல் மையம்

தேசிய சுற்றாடல் தகவல் மையமானது, பாரம்பரிய நூலக முறையிலிருந்து விலகி நவீன டிஜிட்டல் நூலகக் கருப்பொருளின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இது இலங்கையின் சுற்றாடல் தகவல்களைத் தொகுத்து விநியோகிக்கும் பிரதான மையமாகத் திகழ்கிறது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் இயங்கும் இம்மையம், பயனாளர்களுக்குச் சூழல் தொடர்பான அண்மைக்கால ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் தகவல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கையின் தகவல்களைத் தவிர, சர்வதேச சுற்றாடல் அறிவையும் ஒன்றிணைத்து, சுற்றாடல் தொடர்பான நம்பிக்கையான தகவல் மூலமாக இம்மையம் செயற்பட்டு வருகின்றது.

ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சூழல் தொடர்பான ஆழமான அறிவை வழங்குவதற்கும்; இயற்கை, காலநிலை மாற்றங்கள் மற்றும் உலகின் பல்வேறு சுற்றாடல் கோட்பாடுகள் குறித்து கற்க விரும்புவோருக்காகவும் இம்மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிகம் பேசப்படும் சுற்றாடல் கருத்துருக்கள் குறித்து கற்கவும், விழிப்புணர்வைப் பெறவும் விரும்புவோர் 011-2872419 / 011-2872278 / 011-2873447 / 011-2873448 / 011-2888999 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

Related Articles

Back to top button