உலகின் சிறந்த CEO விருது பெற்றார் சுவிஸ் தொழிலதிபர் ஸ்ரீ இராசமோனிக்கம்

சுவிஸ் தொழிலதிபர் Sri Rasa Monickam ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த தலைமை நிர்வாகிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்காக உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதி தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
வணிக வளர்ச்சி, புதுமை, மாற்றுத் தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய தாக்கம் போன்ற அம்சங்களில் காட்டிய சிறப்பான பங்களிப்பை மதிப்பீடு செய்து இந்த விருது வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற வணிக இதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களும் இந்த சாதனையை கவனத்தில் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன.
விருது பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த ஸ்ரீ இராசமோனிக்கம்,
“இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. என்னை நம்பி ஆதரித்த அனைவரின் வெற்றி. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தெளிவான பார்வை இருந்தால் உலகில் மாற்றத்தை உருவாக்க முடியும்,” என தெரிவித்தார்.
“Best Awards International USA” அமைப்பினால் வழங்கப்படும் இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் முக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும் Forbes, CEO Times, Business Insider மற்றும் UAE Times போன்ற உலகளாவிய ஊடகங்களும் இந்த சாதனையைப் பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது உலக தமிழர் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.




