EN
Sports

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பின் நேற்று இடம்பெற்ற 25ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

கொல்கத்தா அணி சார்பாக கெமரோன் கிறீன் 79 ஓட்டங்களையும், பவல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

குஜராத் அணியின் பந்துவீச்சில் ரபாடா 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அடுத்து, 181 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குஜராத் அணி சார்பாக அவ்வணி தலைவர் சுப்மன் கில் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், கொல்கத்தா அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button