EN
Local

கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்

நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொத்மலை – கம்பளை B 431 பிரதான வீதி இன்று (14) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் இதற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்ட பரகம்மன பகுதியில் மீண்டும் வெடிப்புகுள் ஏற்பட்டு மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button