EN
Local

குருநாகல் பிரதி மேயர் 30 இலட்சம் ரூபாய் இலஞ்ச பணத்துடன் கைது

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் பொது மலசலக்கூடத்தைத் துப்புரவு செய்தல் ஆகியவற்றுக்கான டெண்டரை வழங்குவதற்காகப் பிரதி மேயர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button