Local
இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு

இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.




