Local
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டிற்கமைய, போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 489 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 485 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




