EN
Local

தானசாலை பதிவாளர்களுக்கான விசேட அறிவிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரளஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், தானசாலைகளை நடத்த விரும்பும் தரப்பினர், சம்பந்தப்பட்ட பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு தகவல் தெரிவித்து, தானசாலையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தானசாலை நடத்தப்படும் இடம் மற்றும் அதன் வகை குறித்து சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பொது சுகாதார பரிசோதகருக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பதிவுக்குப் பின்னர், அனைத்து தானசாலை அமைப்பாளர்களுக்கும், சுகாதாரப் பாதுகாப்புடன் கூடிய முறையில் தானசாலையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பொது சுகாதார பரிசோதகர்களால் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல்படுத்தப்படும்.

பொது சுகாதார பரிசோதகர்களிடம் பதிவு செய்யாமலும், பாதுகாப்பற்ற முறையிலும் தானசாலைகளை நடத்துவோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரளஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button