EN
Local

வாகன விபத்தில் இளைஞன் பலி

சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, ஐந்தாம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button