Local
அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக கிடைத்த வருமானம்

கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாகக் கிடைத்த வருமானம் 220 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
மேற்படி காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 22 கோடியே 92 இலட்சத்து 42,040 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் மொத்தம் 6 இலட்சத்து 10,325 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.
இதில் அதிகபட்ச வருமானம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம் 5 கோடியே 98 இலட்சத்து 15,450 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.




