Local
வாத்துவ பகுதியில் ரயில் தடம்புரள்வு

வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ விரைவு ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி கரையோக மார்க்கத்தில் கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் களுத்துறை தெற்கு வரையும், கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில்கள் பாணந்துறை வரையும் மாத்திரமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




